ஈரெட்டும் பெறுக!
கரையிலாக் கல்வி
மங்கா அறிவு
குறையா வாணாள்
அழியா ஆற்றல்
தளரா இளமை
நீங்காத் துணிவு
பொன்றாப் பெருமை
உதவும் பொன்
அளவற்ற பொருள்
கரையற்ற புகழ்
பயனுள்ள நிலம்
தமிழ்வளர் நன்மக்கள்
குன்றா நம்பிக்கை
நலமிகு நோயின்மை
தளரா முயற்சி
உயர்மிகு வெற்றி
என நீவிர் இருவரும்
தமிழ் கூறும் ஈரெட்டும் பெற்று
பல்லாண்டு! பல்லாண்டு!
பல கோடி நூற்றாண்டு!
பார்புகழ வாழ்க!!!